Thursday, October 7, 2010

எந்திரன் - விமர்சனம்

               அதிகாலை  மணி  மூன்று அரை இருக்கும் ,சேலம் - மதுரை பேருந்து வழக்கம் போல அரவக்குறிச்சி மோட்டலில் நின்றது .  நா வறண்டு போயிருந்ததால் ஒரு பெப்சி சாப்பிடலாம் என விலை கேட்டேன் ,பதிமூன்று ருபாய் என்று பதில் வந்தது . பத்து ருபாய் தானே என்று சற்றே கோபமாக முகத்தை ஆக்கிக் கொண்டு வியாபாரியை கேட்டேன் ,பத்து ருபாய் என்ன இதோட விலை எட்டு ருபாய் தான் ஆனா  இங்க பதிமுன்றுக்குத்தான்  விப்போம் என்று அடுத்தவரை கவனிக்க சென்று விட்டார் .

             ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தில் ஒப்பனையூட்டபடாத சிறு குழந்தையின்   சிரிப்பை போல் இருந்தது களவாணி திரைப்படம்.அதன் இயக்குனர் பெயரே எனக்கு இன்னும் தெரியவில்லை . இணையத்தை போட்டு ஆராயணும்.            
                                                                       வந்து விட்டதாம் டிஜிட்டல் பிரிண்ட் DVD மார்க்கெட்டுக்கு ,உறவினர்களுக்கு,எனக்கு என் நண்பர்களுக்கு என ஒன்று போதும்.இது போதாதா மீடியா மோனோபோலியை பழி வாங்க.....

Thursday, September 30, 2010

அம்மணமாகத் திரிகின்றன நாய்கள்

அம்பதாயிரம் ஆண்டுகளாய் சப்பித்துப்பிய எச்சிலும் உந்தித்தள்ளிய விந்துவும் பிணைந்த நகல் தானே நானும் . எங்கே எது விடுபட்டது நான் கண்டுபிடிக்க , எந்த நிலப்பரப்பு காத்திரக்கிறது என் பாதத் தடங்களுக்காய்,வெறும் தோற்றம் மறைவைப்பதிவு செய்யவோ எனது கல்லறைக்கான கல்வெட்டு.
       நான் மலடா என் சிந்தனை மலடா? நான்கு கண்களினால் எப்படி  எனக்கான பூக்களை ரசிப்பது? யாருமில்ல்லாதீவிற்கு  போய் விடவா? நில் !!! மொழியே இல்லாத பூமியில் யார் எப்படி உன் புகழ்பாடுவது ? எப்போது  செய்வாய் ஒப்பனை!! ஒப்பிட்டால் தானே உயரமும் குள்ளமும் .
       தினசரியை எடு ,உலகத்தெளிவு வந்து தொலையட்டும்.என்னது கனவு காணச்சொன்ன கலாம் தூக்கமின்றித் தவிக்கிறாரா? திட்டி முடி!! மும்முடிச்சோழன் என்று முத்தமிழ் அறிஞருக்கு மற்றொரு புனைபெயரா  ஞானி துரைமுருகன் சூட்டினரா  .சரியாக எண்ணிப்பார் மூன்றுக்கு மேல் கண்டிப்பயிருக்கும் அவர் தலையில்.
      எப்போது வெளிவந்த தி,ஜா வின் மோகமுள்ளிற்கு இப்போது
விமர்சனமா ? எதார்த்தத்திற்கு ஒத்து வராதா? அவ்வாறாக சொன்னப்பட்ட எழவே பொய்யின் புனைவு தானே ? விருத்தி செய்வது தானே பிரம்ம கட்டளை !!! இல்லை இல்லை யாரேனும் நெற்றிக்கண்ணை திறந்து விடப்போகிறார்கள் .நாகரிகமா,வாழ்வாதாரமா  ஏதேனும் போர்வை எடு .  குறிகளை மறை . அக்கினிக் குஞ்சு பட்டு காதல் வெப்பம் தகிக்கட்டும்.
     காதலி.அள்ளிக்கொள்ள விட்டாலும் அடித்து துரத்தாத அழகில்லையா நான். கவிதை எழுது. அது முக்கியம் இடைஇடையே ஈழத் தமிழருக்காய்  இரோண்டோன்ருமாய் ஏனெனில் வீரமும் காதலும் தமிழருக்கு இரண்டு கண்கள்.
      காமராசு மகன் ராமசாமி பூசை அறையில் நின்று சேகுவரா பிராண்ட் சுருட்டு குடிக்கிறானா ? கூப்பிடு ராமகோபலையும் சீமானையும் சுட்டு தள்ளு அவனை. சந்திர போசை காணவில்லையா கருணாநிதியிடம் போய் காத்திரு, கடிதம் எழுதட்டும் கலாநிதிக்கு திக்கெட்டும் செய்தி பரவட்டும்.தலைவலியா மூக்கடைப்பாஆமாம்ப்பா ஆமாம் தைலாபுரம் செல் தைலம் வாங்கித் தடவு  .தினவு நிக்கலையோ ? வெறும் பசி மயக்கமோ போயஸ் தோட்டம் போ அங்கு தான் அன்ன தானம் நடக்குதாம்.
    சரி கண்ணுறங்கு .தூக்கம் வர வில்லையா அண்ணாCN போட்டுக்கொள் .வேண்டாமா!!! திராவிடதிராவகம் தின்னு தொலை. சொர்க்கம் செல். யாரப்பா சோடியாக செல்வது  பிரபாவும் ராஜிவுமா கெட்டது சனி ,கலி முற்றிற்று .
    எட்டிப்பார்த்தேன் வானம் விடிந்து கொண்டிருந்தது .ஜன்னலினூடே ஏதுமற்ற வெளியில் அம்மணமாய்த் திரிந்து கொண்டிருந்ததன நாய்கள்.