Thursday, September 30, 2010

அம்மணமாகத் திரிகின்றன நாய்கள்

அம்பதாயிரம் ஆண்டுகளாய் சப்பித்துப்பிய எச்சிலும் உந்தித்தள்ளிய விந்துவும் பிணைந்த நகல் தானே நானும் . எங்கே எது விடுபட்டது நான் கண்டுபிடிக்க , எந்த நிலப்பரப்பு காத்திரக்கிறது என் பாதத் தடங்களுக்காய்,வெறும் தோற்றம் மறைவைப்பதிவு செய்யவோ எனது கல்லறைக்கான கல்வெட்டு.
       நான் மலடா என் சிந்தனை மலடா? நான்கு கண்களினால் எப்படி  எனக்கான பூக்களை ரசிப்பது? யாருமில்ல்லாதீவிற்கு  போய் விடவா? நில் !!! மொழியே இல்லாத பூமியில் யார் எப்படி உன் புகழ்பாடுவது ? எப்போது  செய்வாய் ஒப்பனை!! ஒப்பிட்டால் தானே உயரமும் குள்ளமும் .
       தினசரியை எடு ,உலகத்தெளிவு வந்து தொலையட்டும்.என்னது கனவு காணச்சொன்ன கலாம் தூக்கமின்றித் தவிக்கிறாரா? திட்டி முடி!! மும்முடிச்சோழன் என்று முத்தமிழ் அறிஞருக்கு மற்றொரு புனைபெயரா  ஞானி துரைமுருகன் சூட்டினரா  .சரியாக எண்ணிப்பார் மூன்றுக்கு மேல் கண்டிப்பயிருக்கும் அவர் தலையில்.
      எப்போது வெளிவந்த தி,ஜா வின் மோகமுள்ளிற்கு இப்போது
விமர்சனமா ? எதார்த்தத்திற்கு ஒத்து வராதா? அவ்வாறாக சொன்னப்பட்ட எழவே பொய்யின் புனைவு தானே ? விருத்தி செய்வது தானே பிரம்ம கட்டளை !!! இல்லை இல்லை யாரேனும் நெற்றிக்கண்ணை திறந்து விடப்போகிறார்கள் .நாகரிகமா,வாழ்வாதாரமா  ஏதேனும் போர்வை எடு .  குறிகளை மறை . அக்கினிக் குஞ்சு பட்டு காதல் வெப்பம் தகிக்கட்டும்.
     காதலி.அள்ளிக்கொள்ள விட்டாலும் அடித்து துரத்தாத அழகில்லையா நான். கவிதை எழுது. அது முக்கியம் இடைஇடையே ஈழத் தமிழருக்காய்  இரோண்டோன்ருமாய் ஏனெனில் வீரமும் காதலும் தமிழருக்கு இரண்டு கண்கள்.
      காமராசு மகன் ராமசாமி பூசை அறையில் நின்று சேகுவரா பிராண்ட் சுருட்டு குடிக்கிறானா ? கூப்பிடு ராமகோபலையும் சீமானையும் சுட்டு தள்ளு அவனை. சந்திர போசை காணவில்லையா கருணாநிதியிடம் போய் காத்திரு, கடிதம் எழுதட்டும் கலாநிதிக்கு திக்கெட்டும் செய்தி பரவட்டும்.தலைவலியா மூக்கடைப்பாஆமாம்ப்பா ஆமாம் தைலாபுரம் செல் தைலம் வாங்கித் தடவு  .தினவு நிக்கலையோ ? வெறும் பசி மயக்கமோ போயஸ் தோட்டம் போ அங்கு தான் அன்ன தானம் நடக்குதாம்.
    சரி கண்ணுறங்கு .தூக்கம் வர வில்லையா அண்ணாCN போட்டுக்கொள் .வேண்டாமா!!! திராவிடதிராவகம் தின்னு தொலை. சொர்க்கம் செல். யாரப்பா சோடியாக செல்வது  பிரபாவும் ராஜிவுமா கெட்டது சனி ,கலி முற்றிற்று .
    எட்டிப்பார்த்தேன் வானம் விடிந்து கொண்டிருந்தது .ஜன்னலினூடே ஏதுமற்ற வெளியில் அம்மணமாய்த் திரிந்து கொண்டிருந்ததன நாய்கள்.

4 comments:

  1. மிக்க நன்று மாப்ள.. எதோ ஒரு ஏக்கம் தெரிகின்றது உன் வரிகளில் ...
    முதல் பதிவிலேயே உன் எழுத்து நடை மிரள வைகின்றது ..

    ReplyDelete
  2. natpu! unga eluthula oru kobamum koodavey kambiramum iruku..eluthu nadai miga arumai!! sollunga ulagathukku nallatha nalla maariya sollunga kovathai konjam korainga ...

    Mothal paralaye kalakiteenga athuvum mothal vaartha romba eerkumbadiya iruku...ungalukulla oru thedal irukaratha romba arumai velipaduthirukeenga kavalaye padaatheenga ulagathula kandupidika innum neriya iruku atha angigarikkavum aalu iruku aagaiyaal thedalai niruthaatheenga..

    Athoda thodarchiyaa rendaavathu parala ungalukkullaye kelvi keta vithamum kuripa sollanumna antha kelviye romba parattumbadiyaana kelvi "நான் மலடா என் சிந்தனை மலடா?" aaha romba arumaiyaana kelvi oruoruvarum itha thanakula ketu nalla vazhila vidaya therinjika murpaatha athu romba aarokiyamana visayam...yosichi paatha manisan puthusa ethuvum kandudikala koduvul olichivecha oru visayatha paathu ithu iruku apdi nu arivikkiraano apdinu thaan thonuthu!!! aagaiyaal nengalum ethayavathu nalla visayatha irukuratha ariveenga ..athuku ennudaya paaraatukkal...

    "யாருமில்ல்லாதீவிற்கு போய் விடவா? நில் !!! மொழியே இல்லாத பூமியில் யார் எப்படி உன் புகழ்பாடுவது ? எப்போது செய்வாய் ஒப்பனை!! ஒப்பிட்டால் தானே உயரமும் குள்ளமும்" intha varila konnuteenga manusan eppavum yaarathu thanna pughalanumnra nenaipodaye irupaan apdinratha nalla sollirukeenga...manithanaagapatta piranniku evanum either thanna pugalanum illa korai sollanum ithu rendu ilaama iruntha avan intha ulagathula irukura maari nenaipu irukaathu...oppanaiya pathi romba arumaiya sonenga anakaga buddharku aduthu oppidala romba verupeengalonu thonuthu unga variya padichoney...

    ReplyDelete
  3. நீ சீமான் , திருமாவளவன் ,ஆர் ஸ் ஸ் மற்றும் என்னைய தலைவர்களை விட்டு விடு ... தங்களின் மனசாட்சியை சுய பரிசோதனை செய்ய தெம்பில்லாதவர்கள் ...விவேகனந்தர் , புத்தர் வாழ்ந்த வாழ்க்கை உண்மை ..நீ சொல்லும் இயற்க்கை விதிகளும் உண்மை ...ஹிட்லர்,ஸ்டாலின் ,சர்ச்சில் மனித குணங்களும் உண்மையே ......எல்லாமே இயற்கையின் விதிகளே ..'நீ சொல்லுவது மட்டும் 'பிரம்மனின் கட்டளை ' இல்லை ..அப்படி உன்னக்கு சொன்னவன் ' ஐரோப்பா ' நாட்டவன் ...ஆப்ரிகானோ, ஜப்பாநியனோ இல்லை ..நீ 'உரிமையை ' மட்டும் தேர்ந்தெடுப்பது இல்லை ..உன் ஆசையையும் சேர்த்தே உன் வாழ்க்கையை தேர்ந்தேடுகிறாய் ..அதை பொறுத்தே எல்லாம் அமைகின்றன ......நீ 'கேவலங்களை ' உண்மையில் பார்க்கவில்லை , உன்னக்கு கற்பிக்கப்படுகிறது ..கேவலங்களை , அநீதிகளை பார்த்திருந்தால் 'வாழ்க்கையின் , இயற்கையின் மௌனம் பிடித்திருக்கும் '....'வாழ்கையின் அழகான அமைதியான பாதை உன் பிரம்மன் உருவாக்கிவைதிருக்கிறான் ' என்பதை உணர்ந்திருப்பாய் ....தாமதமாக பின்னூட்டம் செய்ததற்கு மன்னிக்கவும் ..உதயசூரியன்

    ReplyDelete